Friday 8 May 2015

1. பண்பாடு - ஒரு விளக்கம்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

பண்பாடு என்றால் என்ன என்பது பற்றியும், அதன் வாயில்கள் எவை என்பவை பற்றியும் இந்தப் பாடத்தில் முதலில் சுட்டப்படுகிறது.

பின்னர், ஒருவன் உண்ணும் உணவு, உண்ணும் முறை, அணியும் ஆடை, அடிப்படைத் தேவைகளான உறைவிடம் போன்றவை     எவ்வாறு     ஒருவனது பண்பாட்டை வெளியிடுகின்றன     என்பவை     எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்படுகின்றன.

ஒரு கருத்தைத் தெரிவிக்கும் அடையாளம் குறியீடு எனப்படும். வண்ணங்கள் குறியீடுகளாகப் பயன்படுத்தப் படுகின்றன. தமிழ்ப் பெண்கள் அணியும் தாலியும், மெட்டியும் சூடிக் கொள்ளும் பூவும் குறியீடுகள். இவை வெளிப்படுத்தும் பண்பாடு பற்றியும் இந்தப் பாடம் கூறுகிறது.

அக உணர்வுகள் வெளிப்படுத்தும் புறப்பண்பாடு பற்றியும், சமுதாய மாற்றங்களினால் பாதிக்கப்படாத தனித்தன்மை வாய்ந்த பண்பாடுகள் பற்றியும் கூறப்படுகின்றன.